❤ பொருட்கள் இடங்களை மனிதர்கள் பற்றிக்கொள்வதால் தான் துயரம் வருகிறது பற்றுதல் அகலும் போது துயரம் விலகுகிறது.
❤ கபடமற்றவராக இருப்பது அடுத்த நபரும் இதே குணநலன்களைத்தூண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
❤ வீண் சிந்தனையில் வீணாக்கும் சக்தியை விழிப்புணர்வாக உருமாற்றம் செய்யுங்கள்.
❤ எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்கள் எஜமானனாய் இருங்கள்.
❤ உண்மையைத்தேடாதே உண்மையாக மாறு.
❤ எல்லாக்கணங்களும் பாக்கியமானவையே நீங்கள் ஆழமான நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் போது எதுவும் எப்போதும் தவறாக நடக்காது.
❤ வாழ்வதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்
❤ ஆணவம் மறைகின்ற கணத்தில் எல்லா இரகசியங்களும் திறந்து விடுகின்றன.
❤ விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்கு உரியது.மற்றவை எல்லாம் அர்த்தம் அற்றவை
❤ ஒவ்வொரு கணத்தையையும் இதுவே கடைசிக்கணம் என்பதைப்போல வாழுங்கள் ,யாருக்கும் தெரியாது இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.
Post a Comment