By சேகர் ராஜதுரை

பெண்ணே!
இந்தக் கடிதத்தை கொண்டு வருபவன்
உனக்காகப் படைக்கப்பட்டவன்
 

இவன்மீது இவனுக்கே உரிமையில்லை
என்னும் அளவிற்கு,
இவன்மீது உரிமை உனக்கு உண்டு.
 

உன் வார்த்தைகள் தேவையில்லை
உன் பார்வைக்கே இவன் அடிமை
இவனை ஏற்றுக்கொள்
இல்லை எப்படியாவது கொல்
 

தன்மீதான உரிமையை இவன் இழந்த்தால்
தற்கொலை செய்துகொள்ளவும்
இவன் தயங்குகிறா
ன்
 

உன் காதல் சிலுவையை சுமக்கும் இவனால்
இவனுக்கு மட்டுமல்ல
மற்றவர்களுக்கும் துன்பம்
 

இவன் உனக்கே உரித்துடையவன் - ஆகையால்
இவன்மீது எனக்கும் உரிமையில்லை - ஆதலால்
இவன் விசயத்தில் தலையிடல் தர்மமில்லை
என்று தெரிந்திருந்தும்
இவன் படும் துயரம் கண்டு
இவன் சார்பில் நான் எழுதும்
இரங்கல் கலந்த சிபார்சுக் கடிதமிது
 

இதுவரை, இவனுடையதென்று
எதையும் நீ ஏற்கவில்லை - ஆதலால் இவன்
தன்னையே ஏற்க மறுக்கிறான்
எனவே பெண்ணே!
உன்னை மட்டும் நேசிக்கும் இவனை
நீ நேசிப்பாயாக....... 

                              இப்படிக்கு இறைவன்..... 
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்