By சேகர் ராஜதுரை
நன் உன்னைக் காதலித்தது
உனக்கும், எனக்கும் மற்றும்
எனக்கும் உனக்கும் தெரிந்த
உன் நண்பனுக்கும் மட்டும் தெரியும்..
என் காதல்
என் வீடில் தெரிந்தால்
என்னவாகுமோ என நான்
பயந்தபோதேல்லாம் - நீ
அடிக்கடி சொல்வாய்
"உனக்கேதும் பிரச்சினை என்றால்
நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று
அதன் அர்த்தம்
விளங்கவில்லை எனக்கன்று
நம் காதல்
என் வீட்டில் தெரிந்ததால்
இப்போது எனக்கு
ஆயிரம் பிரச்சினைகள்
நீ பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாய்
ஒரு அந்நியனைப்போல்
நீ சொன்னது மாதிரி
உன்னை மறக்கச்சொல்லி
கட்டாயப் படுத்துகிறார்கள் வீட்டில்
கஷ்டமில்லாமல் சொல்லிவிட்டாய் நீயும்
கொஞ்சம் கொஞ்சமாய்
செத்துக் கொண்டிருக்கிறோம்
நானும் என் காதலும்.....
Post a Comment