By சேகர் ராஜதுரை

திருமணம்                                                                                                                                                                                என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்த போது தனக்குச் சிரம்ப்பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்யமுன் வந்திருக்கமாட்டான். எனவை இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில், பெண் ஒருவனது ஒத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து பிறகு அவளே அவனுக்குச் சொத்துமானாள். 

பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவுமனா நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனிதச் சுபாவம் இப்படித்தான் இருக்கும்; அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததகா – தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும்.

திருமணத்தின் அடிப்படைத் தேவை
கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நூகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும், ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.

திருமணம் பற்றிய கொள்கை
திருமணத்தின் அடிப்படையே இதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மண மக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புடனும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.

வாழ்க்கைத் துணைவர்களின் உறவு
மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்தத் துணையினைத் தேடிக் கொள்வதுதான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையில் இருக்க வேண்டும்.

நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் ஒத்துப் போக ஒருவரை ஒருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமை உடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.

மணமக்களின் உரிமை
நாங்கள் செய்து வைக்கும் திருமணத்தில் மணமகளும் மணமகனும் சம உரிமை உடையவர்கள். இருவரும் சினேகிதர் மாதிரி. இருவரிலும் உசர்வு தாழ்வு இல்லை. உதாரணமாக இரண்டு பேர்கள் சேர்ந்து பகுதி பகுதி முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றார்கள். இந்த வியாபாரத்தில் இரு வருக்கும் எப்படிச் சம உரிமையும், இடமும், லாப நஷ்டத்தில் சமபங்கும் இருக்கின்றதோ அது போலத்தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்ட மணமக்கள் இருவருக்கும் உள்ள உரிமை யாகும்.

காதல்
ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? குடிகாரனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்