By சேகர் ராஜதுரை
வருகிற புத்தாண்டில்
எனக்கொன்றும்
பெரிசாய்த் தேவையில்லை
 
பேருந்துகளில் ஏறுகின்ற
மற்றும் அடிக்கடி
என் வீட்டுக்கு வருகின்ற   
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
ஓரிரண்டாவது குறைந்தால் போதும்...

என்னுடன்
பழகித் திரியும் நண்பர்களும்
பக்கத்து வீட்டு மாமாவும் - என்
தாத்தாவும் தமையனும்
புகைப்பதை விட்டால் போதும்....

அடுத்த ஆண்டுக்கு அது மட்டும் போதும்




By சேகர் ராஜதுரை
இவைகள்
என் தோட்டத்தில் பூத்த
வெள்ளை ரோஜாக்கள்தான்
அவனுக்கான என் முத்தங்களை
வாங்கிக் கொண்டதால்
கொஞ்சம் சிவந்து போயின...

இந்த ரோஜாக்களும்
அதன் வாசமும்
என் கூந்தலுக்கு
என் கூந்தலும்
அதன் வாசமும்
அவனுக்கு......
By சேகர் ராஜதுரை
யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ ..
வானின்  புலம்  தாண்டி,  நிலம்  தீண்டும்  மழைதானோ ..
நானும்  அவள்  இல்லை  எனில்  இங்கே  பிழைதானோ
உன் மார்மீதும்  தோள்மீதும்  நான்  தூங்கினேன்
உயிர்   இங்கேயே   போகட்டும்  என்றேங்கினேன் 
கரைகளே  இல்லா  நதி  ஒரே  ஒரு  ரதி ..!!

ஓர்  ஆகாய  தூரம்  நான்  போகின்ற  போதும்
என்  பக்கத்தில்  நிற்பாள்  அவள்
நான்  வீழ்கின்ற  நேரம்,  பொன்  கை  ரெண்டும்  நீளும்
தன்  கக்கத்தில்  வைப்பாள்   அவள்
நான்  காலை  பனி,   நீ  புல்லின்  நுனி
நான்  விழாமல்  நீ  தாங்கினாய்
நான்  கேளா  ஒலி,   நீ  தானே  மொழி
என்  ஓசைக்கு  பொருளாகிறாய் 

யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ ..

நான்  தூங்காத  போதும்  -  என்   துன்பத்தின் போதும்
என்  அன்னை  போல்  காத்தாய்  என்னை
பொன் வானெங்கும்  நீயே  விண்  மீனாகின்றாயே   
நான்  அண்ணாந்து  பார்பேன்  உன்னை
நான்  கேட்கும்  வரம்,  என்  வாழ்நாள் தவம்
உன்  அன்பன்றி  வேறேதடி 
உன் பாராமுகம்  நீ  காட்டும்  கணம்
நான்  கூறாமல்  சாவேனடி .. 

யார்,  அவள்  யாரோ,  அவள்  யாரோ, கனாதானோ  ..
யாரோ, நிலாதானோ,  விடை  இல்லா வினாதானோ .. 


Movie  - Muppoluthum Un Karpanaikal
Lyrics  - Thaamarai
By சேகர் ராஜதுரை
அந்தச் "சுனாமி" என்ற
ஆழிப் பேரலை  - என்  
உறவுகளையும்  உடமைகளையும்
எடுத்துச்  சென்று
ஏழு  ஆண்டுகள் எட்டிவிட்டன   - அது
என் மனதில் ஏற்படுத்திய
தழும்புகளும் வலியும்  - இன்றும்
என் கண்கள் வழியே
கண்ணீராய்......
By சேகர் ராஜதுரை
நான் காதலி
உனக்கும்
உன் கவிதைகளுக்கும்

உன் கவிதைகளும்
நீயும் காதலர்கள்
இன்னொருத்திக்கு....
By சேகர் ராஜதுரை
நான் உனக்கென
எழுதிய கவிதைகளை - என்
நண்பர்கள் கேட்பார்கள்
அவர்களுடைய காதலிகளுக்கென....
கொடுக்க மறுக்கிறேன்
தேவதைக்கென்று எழுதியது
பெண்களுக்கு எப்படிப் பொருந்தும்? 
By சேகர் ராஜதுரை
அந்தத் திருவிழா நெருசலில்
நீ தொலைத்து
நான் எடுத்த - உன்
கசங்கிய கைக்குட்டையில் 
இருந்தது
உன் வாசமும் - அடுத்த 
ஒரிரண்டு வாரங்களுக்கான
என் சந்தோசமும்.....
By சேகர் ராஜதுரை


 1. சங்க காலம்

ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

   * * * * *
 2 காவிய காலம்

பொன்னங் கொடியென்பார் 
போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் 
-  இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடி
உன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

* * * * *
 3 சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன்

பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
   * * * * *
 4 சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - 

மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் -

நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
   * * * * *
 5 தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
   * * * * *
6 திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
   * * * * *
 7 திராவிட காலம் - 2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
   * * * * *
 8 புதுக்கவிதைக் காலம் - 1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
   * * * * *
 9 புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
 * * * * *


By சேகர் ராஜதுரை
 
 






* * * * *
துளைகள் கொண்டது மனிதமனது
எறும்பின் கண்ணினும் 

நுண்ணிய துளைகள்
விழியினும் சவ்வினும் 

மெல்லிய துளைகள்
ஆயிரம் லட்சம் கோடித் துளைகள்

பல துளைகள்
பிறந்தது முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை
இறக்கும் வரைக்கும் திறக்காதவை

அத்தனை துளைகளும்
திறத்தல் அரிது

அத்தனை கோடித் துளைகளையும்
ஒரே கணத்தில் திறந்துவைக்கும்
விசை எங்கு கண்டாய்
இசையே!

   * * * * *

காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!

   * * * * *
நாவுக்குச் சிக்காத அமிர்தம்
நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

 
நீயே சொல் இசையே
செவியே போதுமா?
நான்கு புலன் உபரியா?
மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
மாறுவேடம் போட்டபடி
நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
   * * * * *
நதி -
நடந்துபோகும் சங்கீதம்

மழை -
அவரோகண சங்கீதம்

மழலை -
பிழைகளின் சங்கீதம்

மெளனம் கூட
உறைந்துபோன சங்கீதம்

பூமி சுற்றிக் காற்று
காற்று சுற்றி இசை
இசைக்குள் மிதக்குகம்
ஜீவராசிகள்
   * * * * *
இசையே!
தூங்கவை எங்களை

உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு

இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு

உள்ளிருக்கும் விலங்குத்தோல்
உரி

மென்குணங்கள் மேம்படுத்து

நாங்கள்
இறுகி இறுகிக்
கல்லாகும்போது
இளகவிடு

குழைந்து குழைந்து
கூழாகும்போது
இறுகவிடு

நீயில்லாத பூமி
மயானம்

மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.
By சேகர் ராஜதுரை
சிலரைப் காணும்போது நம்மை யறியாமலேயே ஒரு பாசம் ஏற்படுகிறது.  இனம் தெரியாத அந்தப் பாசத்திற்கு இறைவனைத் தவிர வேறு காரணத்தைச் சொல்ல முடிவதில்லை.  அதிகம் பழகி இருக்கமாட்டோம்.  இரண்டு வார்த்தைகளுக்கு மேல் பேசிகூட இருக்கமாட்டோ ம்.  ஆனால் அவர்கள் நல்லவர்கள்,  உயந்தவர்கள் என்ற அபிப்பிராயம் திடுதிடுப்பென்று வந்துவிடுகிறது. 

சொல்லப்போனால் அந்த அபிப்பிராயம் சரியாகவும் இருக்கும். சிலரோடு திரும்பத் திரும்பப் பழகினாலும் அவர்களைப் பற்றிய எந்தவித உணர்ச்சியும் நம் மனதில் எழுவதில்லை. நான் மிகவும் அபூர்வமாகச் சந்திப்பவர்களில் ஒருவர் திருமதி வாணி ஜெயராம். 

ரெக்கார்டிங்கிற்குப் போனால்தான் அவரை நான் சந்திப்பேன். ஆனால் பெரும்பாலும் பாடல் ஒலிப்பதிவிற்கு நான் போவதேயில்லை. அன்று அபூர்வமாக ஒரு ஸ்டுடியோவில் நான் வாணிஜெயராமைப் பார்த்தேன். 'இந்தியாவின் எல்லா மொழிகளிலும் பாடியவர்' என்ற சிறப்பைப் பெற்ற வாணி ஜெயராம் மிகவும் அடக்கமானவர். யார் அவரைப் பார்த்தாலும் தங்கள் குடும்பத்தில் அப்படியொருவர் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றும். எனக்கு ஏதோ ஒரு நெருங்கிய உறவுப் பெண் நினைவே, வாணிஜெயராமைப் பார்க்கும் போதெல்லாம் வரும். பத்து வருஷங்களுக்கு முன் முதன் முதலில் சந்தித்தபோது பளிச்சென்று அந்த எண்ணம் உண்டாயிற்று. இதைப் பூர்வஜென்ம பந்தம் என்பார்கள். 

வாணி இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வட நாட்டில்தான். எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டது. அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமைகூட வந்துவிட்டது. வாணிஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ, அவருடைய இசையமைப்பில் தான் பாடுவதில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்தார். ஆனால் என்ன? ஒரிஸாவிலும், வங்காளியிலும், நான்கு திராவிட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது. பானுமதி, வரலட்சுமி, சூரியகுமாரி ஆகியோரின் குரலைப் போல், வாணியின் குரலும் தனித் தன்மைவாய்ந்தது. அந்த ஒலியில் ஒரு குடும்ப சுகம் இருக்கிறது. 

சோகப் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தமான குரல் திருமதி  டி.எஸ்.பகவதியினுடையது. பகவதி சோகம் பாடினால் நான் அழுதுவிடுவேன்.
அடுத்தது வாணி. முறையான சங்கீதப் பயிற்சியுள்ளதால் எளிய கர்நாடகத்தில் வாணியின் குரல் ஒலிக்கும் போது, அதன் சுகமே அலாதி.



''ஏழு ஸ்வரங்களுக்குள்'' பாடலை எங்கே கேட்டாலும் நான் மெய்மறந்து நின்றுவிடுவேன்.
வாணிக்குப் புத்தகம் படிப்பதில் ஆசை அதிகம். அதிலும் கவிதைகளில் ஈடுபாடு அதிகம். அதனால் எந்தப் பாடலைப் பாடினாலும் உணர்ந்து பாடுகிறார்.

வாணியின் கணவர் ஜெயராம், பண்பாடும் அன்பும் மிக்கவும். சுசீலாவின் கணவரைப் போலவே இவரும் வாணியின் தொழிலில் தலையிடுவதில்லை.
சில பொது ரெக்கார்டுகளுக்குப் பாடும்போது, வாணி, சுசீலா, ஜானகி ஆகியோர் பண விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதில்லை.

இசையமைப்பாளர் இரண்டுதரம் பாடினால், உடனே ஒலிப்பதிவுக்குத் தாயாராகிவிடுகிறார் வாணி.
அன்று நான் எழுதிய புத்தகங்களில் நாற்பத்திரண்டு புத்தகங்களை வாணி கேட்டுப் பெற்றுக்கொண்டார். 'தினமும் அதைத்தான் படித்து வருகிறேன்' என்று டெலிபோனில் சொன்னார்.
டெலிபோனில்கூட வாணியின் குரல் தெய்வீகமாக ஒலிக்கும்.
வாணியின் குரலுக்கு, குடும்பப் பாடல்களே கவர்ச்சிகரமானவை. 'காபரே' பாடல்களை அவர் மிக அழகாகப் பாடினாலும், அவை என்னவோ வாணியின் குரலுக்கு ஒத்துவராதவைபோல் தோன்றும்.

வாணியின் தோற்றத்தைப் பார்ப்பவர்கள், அவர் கலை உலகத்தில் இருப்பதாக நம்பமாட்டார்கள். அவர் அழகானவர்; திருத்தமானவர்; குடும்ப பாங்கானவர். தோற்றத்தில் பாண்டிய நாட்டுப் பெண்கள் மாதிரி ஒரு கம்பீரம் இருக்கும். அது போலவே அடக்கமும் அமைதியும் இருக்கும்.
எல்லா பாஷைகளையும் அவற்றினுடைய தொனி தவறாமல் உச்சரிக்கும் வாணியும் ஓர் ஆயுள் காலப்பாடகியே.

பெயர் பொருத்தம் பலருக்கு அமையாது. வாணிக்கு அமைந்திருக்கிறது. வாணி, உண்மையிலேயே கலைவாணிதான்.
ஆண் போன்ற குரல் படைத்த பெண்களும் இருக்கும் இப்பூமியில், வீணை ஒலிபோன்ற குரல் படைத்த வாணியை இறைவன் அதே குரலோடு நூறாண்டுகள் வாழ வைக்க வேண்டும்.
By சேகர் ராஜதுரை
பொருட்கள் இடங்களை மனிதர்கள் பற்றிக்கொள்வதால் தான் துயரம் வருகிறது பற்றுதல் அகலும் போது துயரம் விலகுகிறது.

கபடமற்றவராக இருப்பது அடுத்த நபரும் இதே குணநலன்களைத்தூண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

வீண் சிந்தனையில் வீணாக்கும் சக்தியை விழிப்புணர்வாக உருமாற்றம் செய்யுங்கள்.

எப்போதும் உங்களை வழிநடத்துவதில் நீங்கள் எஜமானனாய் இருங்கள்.

உண்மையைத்தேடாதே உண்மையாக மாறு.

எல்லாக்கணங்களும் பாக்கியமானவையே நீங்கள் ஆழமான நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளும் போது எதுவும் எப்போதும் தவறாக நடக்காது.

வாழ்வதற்காக எல்லாவற்றையும் தியாகம் செய்யுங்கள்

ஆணவம் மறைகின்ற கணத்தில் எல்லா இரகசியங்களும் திறந்து விடுகின்றன.

விழிப்புணர்வு ஒன்றே எனது மதிப்பிற்கு உரியது.மற்றவை எல்லாம் அர்த்தம் அற்றவை

ஒவ்வொரு கணத்தையையும் இதுவே கடைசிக்கணம் என்பதைப்போல வாழுங்கள் ,யாருக்கும் தெரியாது இதுவே கடைசியாகவும் இருக்கலாம்.
By சேகர் ராஜதுரை
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
 

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
 

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
 

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
 

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
 

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
 

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
 

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
 

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
 

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
 

'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!
 

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!


இந்த கவிதை இன்னொரு வலைப்பதிவிலிருந்து 'சுட்டது'.
இந்த கவிதையில் உள்ளது எல்லாம் உண்மை வரிகள் என்று எனக்கு பட்டது.
By சேகர் ராஜதுரை
யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்,
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்,

அன்பே சிவம், அன்பே சிவம், என்றும்,
அன்பே சிவம், அன்பே சிவம், எங்கும்,

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதழல் தின்றுவிடும்,
ஆன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்,

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா,
மனதின் நீளம் எதுவோ, அதுவே வாழ்வின் நீளமடா,

யார் யார் சிவம்? நீ நான் சிவம்,
வாழ்வே தவம், அன்பே சிவம்,

படம்        -    அன்பே சிவம்
வரிகள்   -    வைரமுத்து






By சேகர் ராஜதுரை
கன்ணே நீ போகும் வழி
எங்கு போனாலும்
எல்லா வழியும்
என் வீட்டு வாசலில்
வந்துதான் முடியும்

கலை மானே உன் தலை கோதவா
இறகாலே உன் உடல் நீவவா

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதயில் தேன் மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
காதலியே...

தொலைவானபோது பக்கம் ஆனவள்
பக்கம் வந்த போது தொலைவாவதோ ?

மொழியோடு சொல்லுக்கு ஊடல் என்னவோ ?
சிங்காரப் பூவுக்கு சேவை செய்யவோ ?

பூஞ்சோலை அமர்ந்து சென்றாய் கொஞ்சம் நேரம்
சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசம்

நீ என்னை பிரிந்ததாய் யார் சொன்னது? - என்
உயிர் வாழும் புள்ளிதான் நீ என்பது..

உன் கையிலே பூ வலை போடவா
உன் பாதயில் பூ மழை சிந்தவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா
நெஞ்சில் சூடவா...
காதலியே...

படம்                         -  தாளம்
பாடல் வரிகள்     -  கிடைக்கவில்லை

By சேகர் ராஜதுரை

புதிது புதிதாக எழுதச் சொல்கிறார்கள்  உன் பழைய ஞாபகங்களைத் தான் கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே அற்புதமான அன்பளிப்பு இந்த வேதனைதான்

உன் புருவங்கள் என்பது கோடிட்ட இடம் அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா?


இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்

நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன் வானியல்

By சேகர் ராஜதுரை

உன் கேசத்தைக் கலைத்து விடாத காற்று !
உன் மேனியை சுட்டு விடாத வெய்யில் !

உன் மேல் மட்டும் தூறாமல் பொழியும் மழை !

உனக்கு மட்டும் தென்றலடிக்கும் மரம்!

இருந்தால் நல்லது .

By சேகர் ராஜதுரை
மிதித்து விட்டா போவது வழியில்
அவள் பாதச் சுவடு ! 

பேருந்து கம்பியைத் தடவிப் பார்க்கிறேன்  அவள் ரேகைத் தட்டுப்படுமா ?   

இந்தச் செடிக்கு காதியில் வாங்கிய கெட்டித் தேன் ஊற்றலாம், அவள் தவறாமல் அதில் பூப்பறிக்கிறாள்!  

அவள் வீட்டு வாசலைத் தோண்டினால் புதையல் நிச்சயம், அங்கே அவள் தினசரி கோலம் போடுகிறாளே !  

இதோ அவள் மறந்து போன கைக்குட்டை …, இல்லை கசங்கிய ஒரு துண்டு வானவில்!

உதட்டோரப் புன்முறுவல், அது ஐம்பெருங்காப்பியத்தின் ஆரம்ப விழா!

இரவில் விழுகிறதே வானவில், ஓ! அவள் உறக்கம் வராமல் மாடியில் உலவுகிறாளா ?

இந்தப் பூமிக்கு இவ்வளவு அழகாக ஓவியம் வரைய வருமா?, அடடா..அது அவள் பாதத் தடமா ?

அவளிடம் சொல்லுங்கள் , உனக்காக ஒருவனுக்கு அங்கே கண்கள் வழியாய் இதயம் ததும்பிக்கொண்டிருக்கிறதென்று !

By சேகர் ராஜதுரை

எத்தனை சொந்தம் என் வாழ்வில்
வந்தாலும் அம்மா
உன் ஒற்றை பார்வையின் பந்தம்
எதுவும் தந்ததில்லை  

உன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்
மறைத்தாய் அம்மா
இத்தனைநாளும் அது எனக்கு
விளங்கியதில்லை  

நான் வளரும் ஒவ்வொரு நொடியும்
உனக்கு பாரம் தான்
தெரிந்தும் சுமக்கிறாய்
பத்து மாதம் வரை அல்ல
உன் ஆயுள் காலம் வரை

உன் காலம் நரைக்கும் நேரத்தில்

என் நேரம் உனக்காய்
இருக்க போவதில்லை
தெரிந்தும்
காக்கிறாய் உன்
இமைக்குள் வைத்து என்னை
கடமைக்காக அல்ல
கடனுக்காக அல்ல
கடவுளாக

உன் வாழ்வின் ஒரு பாதி

உன் பெற்றோருக்காய்
மறு பாதி உன் பிள்ளைகளுக்காய்
மனதார பகிர்ந்தளித்து விட்டாய்
என்றாவது உனக்காய் வாழும்
உத்தேசம் உண்டா

உன் அன்னைக்கு என்ன கைமாறு

செய்தாலும் உன்னை எனக்கு
தந்ததிற்கு ஈடாய்
ஒன்றும் செய்ய இல்லாமல்
முடமாய் நிற்கிறேன்  

ஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை
இனி ஒரு ஜென்மம்

இருந்து உயிரினமாய் பிறந்தால்
உன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்
மட்டும் போதும்

ஒரே ஒரு வேண்டுகோள் உன்னிடம்

இன்று மட்டுமாவது
உனக்காய் வாழ முயற்சி செய்

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

By சேகர் ராஜதுரை
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?

தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
   * * * * *

முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே

சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்

ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்

ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை
பாம்பின் படம்கூட
அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
   * * * * *


காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!
பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஜாதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு


கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஜாதி பிரிக்கலாம்

சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை
 நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!
By சேகர் ராஜதுரை
உன்னுடன்  ஒப்பிடும்போது
அழகில்  நான்
அதிகம் குறைவுதான்
ஆனால்  - என்
காதலுடன் ஒப்பிடும்போது
இந்த உலகம்
கொஞ்சம் சிறிதுதான்...

அழகு...

என்னிடம் இல்லையென்றால் என்ன....
உன்னிடம்தான்  இருக்கிறதே
ஊரழகா..... பேரழகா....
உலகழகே உன்னிடம்தான்.....
By சேகர் ராஜதுரை

சென்னை மெரினா பீச் எங்கும்
ஆதாம் - ஏவாள்கள்
ஆதாம் - ஏவாள்கள்
 

நம் கேமரா சுழல ஆரம்பிக்கிறது.
மாலை 6.30
இருவர் இருவராய் வருகிறார்கள்.
மாலை 7.30
ஒருவர் ஒருவராய் இருக்கிறார்கள்.

ஒரு சிற்றின்பப் பூங்காவாய்

மெரினா !

அதோ, கேமரா கூர்கிறது

அந்த ஹார்பர் பகுதியின் பழைய கூவத்தை தடுத்து நிற்கும்
இரும்பு மதகுகள்

மீசை வளராத ஒரு பையனும்

.... வளராத ஒரு பெண்ணும்
அங்கே போகிறார்கள்.

போய் என்ன ?

இன்னொரு தாஜ்மஹாலுக்கா
அஸ்திவாரம் தோண்டப் போகிறார்கள்?

சில லுங்கி மனிதர்களுக்கு

அதை வேடிக்கை பார்ப்பது
வாடிக்கை.
.

கேமராவைத் திருப்பினால்

அதோ, ஒரு கட்டுமரம் !
மீனவர்களின் கர்ப்பக்கிரகம் !
கர்ப்பக்கிரகத்தில் கிடக்கிறது
கர்ப்பத் தடை மாத்திரைகள் !

அதோ, லைட் ஹவுஸ்

ஆதாம் - ஏவாள்களுக்கு
லைட் ஹவுஸ் பிடிக்காது
இருட்டு இருட்டாய் இருக்கும்
கெஸ்ட் ஹவுஸ் பிடிக்கும் ?
அவர்களுக்கு
ஒளி ஒளியாய் இருக்கும்
லைட் ஹவுஸ் பிடிக்குமா ?

இதோ, இங்கே அண்ணா சமாதி

எம்.ஜி.ஆர் சமாதி
எதையும் தாங்கும் இதயங்கள்
இதையும் தாங்குகின்றன.

சுற்றுலா பயணிகள் நனைகிறார்கள்.

சுற்றுலா வரும் பெண்கள் கவனிக்க:
(முழங்கால் வரை புடவை தூக்கி
கடலில் இறங்காதீர்கள்.
பலபேர் கண்களோடு பிறப்பதே
இதற்காகத்தான்.)
.
அதோ ! நம் கேமரா
சுண்டல்காரப் பையனிடம்
பேட்டி எடுக்கிறது.

"கட்டுமரத்தாண்ட என்ன பார்த்தே ?"

சிரிக்கிறான்.
"அங்கே ஓர் அண்ணன்
குழந்தையாயிட்டாரு !"

காற்று வாங்குவதற்காக

கடற்கரை பக்கம் வந்த
ஷாஜகான் - மும்தாஜ் ஆவிகள்
இவற்றைப் பார்த்துக் கடலில் விழுந்து
இரண்டாம் முறை இறந்ததாகக் கேள்வி !

மாநகராட்சி சோடியம்

விளக்குகளால்
மாநாடே போட்டிருக்கிறது !
ஆதாம் - ஏவாள் எதற்கும்
கலங்குவதில்லை
அவசர மகசூல்தான்
அவர்களுக்கு முக்கியம்.

அலைகள் விளையாடி

ஆனந்தம் நிறைந்த
மெரினா கடற்கரையா ?
காம விளையாட்டுச்
சிற்பங்கள் நிறைந்த
கஜுராஹோ கோயிலா ?

' காதாலாகி... கசிந்துருகி...

கண்ணீர் மல்கி'
என்று எழுதியவன்
எழுதிய விரல்களை
வெட்டிக் கொள்வான்.
.
அதோ நம் கேமராவை
ஜூம் செய்கிறோம் !
ஒரு இரண்டு சக்கர
வாகன மறைவு
பள்ளிக்கூடச் சீருடைதான்
அவர்களுக்கு
ஒரு பெற்றோரின் கனவு
மாளிகைக்கு
மனித வெடிகுண்டாய்
மாறிக் கொண்டிருக்கிறார்கள் !
அவனும் - அவளம்.

எங்கே போகிறது இந்தியா ?

இந்தியர்கள்
அமெரிக்காவுக்கு போகலாம்.
இந்தியக் கலாச்சாரம்
அமெரிக்காவுக்குத் தாவுகிறதா ?
.
அதோ !
ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பகுதி
ஆதாம் அவளை
'தேவதை' என்கிறான்
ஏவாள் அவனை
'தேவன்' என்கிறாள்
கடைசியில் இருவருமே சாத்தான்கள் !

பாரதி இதைப் பார்த்திருந்தால்

தலைப்பாகையை கழற்றிவிட்டு
தண்டவாளத்தில் படுத்திருப்பான் !

கோவா கடற்கரை

அலைகளில் இருக்கும் கேவலம்
மெரினா கடற்கரை
அலைகளிலும் கலக்கிறதா ?

காதலர் என்ற் பெயரில்

இந்த சதைப் பிராணிகள் சிலது
தற்கொலை செய்து கொள்கின்றன.
மரணம் இவர்களால்
அசிங்கப்பட்டுப் போகிறது.

நம் கேமராவையே நம்மால்

நம்பமுடியவில்லை.
இரண்டு ஆதாம் ஓர் ஏவாள்
ஓர் ஆதாம் இரண்டு ஏவாள்

ஒன்று தெரியுமா ?

கவிஞர்கள் யாருமே இப்போது
கடற்கரைக்குப் போய்
கவிதை எழுதுவதில்லை.
கடற்கரைக்குப் போனால்
கவிதை எங்கே வருகிறது ?
காமம் தான் வருகிறது.

ஆப்பிள் கடித்தால்

அந்த ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மானமும், நாணமும் வந்ததாம் !
அந்த ஆப்பிள் எங்கே கிடைக்கும்
ஒரு லாரி ஆப்பிள்
அனுப்ப முடியுமா ?
இங்கே மானமும் நாணமும்
நிறைய வேண்டியிருக்கிறது !

இவ்வளவு நேரம்

இந்த நீல இனங்களை
'ஆதாம் ஏவாள்'
என்ற பெயர்களால் குறித்தேன்.

அந்த ஆதாம் - ஏவாள்

என்னை மன்னிப்பார்களா?

By சேகர் ராஜதுரை

நிழல் தேடாதே
உன் நிழலில் ஒரு
ஊரையே நிற்கவை !

முட்களில் மோதிக்

கிழியாதவனுக்குப்
பூக்களைத் தடவும்
தகுதி கிடையாது !

மகிழ்ச்சியாய்ச் சிரி

கவலைகளைப் பிய்த்துக்
காற்று மண்டலத்திற்கு
அப்பால் வீசு !

எதைக் கண்டும்

பிரமிக்காதே
பிரமிப்பைப்போல் ஒரு
பின்னடைவே கிடையாது !

தோல்வி என்பது

சிந்திக்கத் தெரியாதவனின்
சித்தாந்தம் !

நிலாவைத் தொட்டது

மூன்று தோல்விகளுக்குப்
பிறகுதான் !

நீ எழுந்தால் ஒரு

எட்டு வந்து பார்க்காதவன்
நீ விழுந்தால் விழுந்து
விழுந்து விசாரிப்பான் கவனி !

இளைஞனே

இரைப்பையையும்
நம்பிக்கையையும்
காலியாக விடாதே !

நடக்குமா என்ற

கேள்வி-
உன் நம்பிக்கைக் கோபுரத்தின்
அத்திவாரத்தில்
விழுந்த கடப்பாறை !

உலகை உலுக்கி உலுக்கி

எடுத்தவனெல்லாம்
துவக்கத்தில் ஒரு
தூசுப்படலமாக இருந்தவன்தான் !

By சேகர் ராஜதுரை

அவன் கொஞ்சம் கறுப்பு..  

இருட்டு எனக்கு சினேகிதமாகி விட்டது !

 

அவன் குரல் கொஞ்சம் கரகரப்பு 

குயில்களை நான் வெறுக்கத் துவங்கியிருக்கிறேன்!

 

அவன் மீசை கொஞ்சம் குத்தும் 

இப்போது நான் முட்களின் ரசிகை!

 

அவன் ஒரு மௌன வாசி 

கச்சேரி நடக்காத அரங்கங்களில் அமரவே பிரியப்படுகிறேன்!

 

அவன் குறுந்தாடி மன்மதன் 

பல் துலக்கியால் என் முகமுரசி பழக்கபடுத்திக் கொள்கிறேன்!

By சேகர் ராஜதுரை
நேர்முகத் தேர்வு பல
இதுவரைக்கும் முடித்துவிட்டேன்
வேலை இன்னும் கிடைக்கவில்லை

எனக்குத் திறமை யுண்டு -  இது
எனக்கும்
என்னைத் தெரிந்த
எல்லோருக்கும் தெரியும்
என்ன செய்வது.....
என்னைத் தெரிந்த எவருக்கும்
எனக்கு வேலை தரும் வசதியில்லை

ஆரம்பத்தில்.....
எத்தனையோ  வேலை வந்தும்
வேண்டாமென்று விட்டுவிட்டேன்
கொள்கைகள் தடுத்ததனால்

குறித்த துறையினிலே
பிடித்த வேலை வேண்டும்...
அதனால்   - என்
கால் பிடித்த வேலையெல்லாம்
அடித்துத் துரத்தி விட்டேன்
 
ஆனால் இப்போது.......
எந்த வேலையேனும்
கொடுத்தால் போதுமென்று
எத்தனையோ கால் பிடித்தும்
அடிக்காமல் துரத்தப்பட்டேன்

வங்கி வேலைக்கான
நேர்முகப் பரீட்சையது

"அனுபவம் ஏதுமுண்டா?"  என்றால்
"சொந்தமாய் ஒரு வங்கி
என்னிடம் இல்லையையா
அனுபவம் நான் பெறுவதற்கு"  என்றேன்

ஒரு வெளிநாடு வேலைக்கு
கொழும்பிலே தேர்வு.....

"இதற்கு முன்னர் நீங்கள்
வெளிநாடு சென்றதுண்டா?"  என்றால்
"கொழும்பிற்கு வந்தது நான்
இதுதான் முதல் தடவை" என்றேன்

இவற்றை யெல்லாம்
விட்டு விட்டேன்
ஒன்று மட்டும் விளங்கவில்லை

திறமை யெல்லாம் அடுத்த படி
அனுபவம்தான் முதல் படி    ..... என்றால்
அனுபவம் பெறுவதற்கு
என்ன நான் செய்யவேண்டும்

அதற்கும் அனுபவம் வேண்டுமோ.....?
By சேகர் ராஜதுரை
அந்தியின் வெய்யிலை
பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளும் புறமும் உன் முகமே
ஊர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பம்முகின்ற  கதல்
அதை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல்
அட என்னவென்று சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேனோ?....

ஒரு மொட்டவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழ்ந்த காதல் சொல்ல ஏலும்
என நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்

பல வண்ண வண்ணக் கற்கள் வைத்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ தூங்கவென்று கத கதப் போர்வை
தேடுகின்றேன் நான்

நின்  தோட்டுக்கென சிப்பி சங்கு தரவா
மான் குட்டி போல முத்துசரம் தரவா
தேன் குட்டி போல தூவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க.....?

சிரிப்பால் ஈர்க்கும் உனக்கு
வீட்டில் செயற்கை அருவி தரலாம்
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்
வாங்கத் தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

உன் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
சற்று தள்ளி சென்றால் செத்ததுபோல் நடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ?.....

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும்படி காலணிகள் கொடுப்பேன்
ஓர் தேவையென்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாங்கினால் என்ன.......

உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா..ஹேய்..

தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜகானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்கு பின்பு வாழ்வதை

விரல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்க நகை எதுக்கு
வாங்கவில்லை நான்..ஹேய்..

வரிகள் - கவிதாயினி தாமரை
படம்      - முப்பொழுதும் உன் கற்பனைகள்













By சேகர் ராஜதுரை


நிலவுகள் துரத்த நான் நடந்தேன்,
உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன்.
உன்னை அன்றி யாரை நினைப்பேன்?
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்?
காலை வந்தும் கலைய மறுக்கும்
இனிய கனவே!
By சேகர் ராஜதுரை
ஏ இந்தியாவே…!எத்தனை கொடுமைகள்

செய்துவிட்டாய்

எங்கள் தமிழினத்திற்கு…
எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று…

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்…

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!

தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே…
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!

உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!

எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே…

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்……
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!
நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே…
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே…
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே…
 

உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!


நரமாமிசம் புசித்தவர்களே…
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்…

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!
 

……….
பின்குறிப்பு:

உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும்குழந்தைகளே…
 
அவர்கள் நீடுழி வாழட்டும்!
எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!

(இந்த கவிதையை வாசிக்கும் பொழுது உங்கள் கண்ணில் கண்ணீர் துளிர்த்தால் நீங்கள்  உணர்வுள்ள தமிழரே!)
By சேகர் ராஜதுரை
வெயிலின் நிறம் மஞ்சளுக்கு மாறிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரம்.
திருமதி வாணி ஜெயராம் அவர்களின் வீட்டு வெளிச்சுவர் தனது நெந்றியில் ''மயூரப்பிரியா'' என்று எழுதி வைத்திருக்கிறது.

மயூரம் என்றால் மயில் என்று பொருள்.

தன் வீட்டுக்கு மயில் என்று பெயர் வைத்திருக்கிறதே ஒரு குயில் என்று மனதுக்குள் ரசித்துக் கொள்கிறேன்.

திரு. ஜெயராம் அவர்களும், திருமதி வாணி ஜெயராம் அவர்களும் புன்னகை ராகம் பாடி வரவேற்கிறார்கள்.

அந்த வரவேற்பறையின் அமைதி சுமந்த அழகு, வெயிலோடு அழைத்து வந்த வெப்பத்தையெல்லாம் வெளியே அனுப்பிவிடுகிறது.

விருதுகளை எல்லாம் கண்ணாடிச் சுவர்களுக்குள் அடுக்கி வைத்திருக்கும் அழகு..

தனது கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி வைத்த அமரர் வசந்த்தேசாயின் படத்திற்கு மாலையிட்டு வைத்திருக்கும் மாண்பு...



சுவரில் வழியில் வர்ணக் கலவைகளால் நதியின் திருப்பத்தில் நகரும் ஒரு படகு...

அந்த அறையெங்கும் தூய்மைக்கு அங்குலம் அங்குலமாக அலங்காரம் செய்து வைத்திருக்கும் அந்தப் பாங்கு...

இவையெல்லாம் அந்தக் கோடை வேளையில் மனசுக்குள் மெல்லிய மல்லிகைக் காற்றாய் வீசின.

''உங்களுடைய மூலப்பெயருக்கு ஏற்றவாறே வீட்டை வைத்திருக்கிறீர்கள்?'' என்று வியந்து போகிறேன். (அவருடைய மூலப்பெயர் கலைவாணி)

எனது பொய்யில்லாத புகழ்ச்சியை அவர் தனது புன்னகையால் அங்கீகரித்துக் கொள்கிறார்.

வீட்டைச் சுற்றிக் காட்டுகிறார்.

ஒவ்வோர் அறையிலும் தூய்மையும் அழகும் அரசோச்சுகின்றன.

அங்கே ஆடம்பரத்தின் விசுவருபமில்லை.

அழகு அடக்கமாக இருக்கிறது.

வீட்டை கட்டியதிலும் அதைக் கட்டிக் காப்பதிலும் உள்ள பெருமை தன் கணவரையே சாரும் என்று பெருமை நுரைக்கப் பேசுகிறார்.

திரு. ஜெயராம் அவர்களின் கலை உள்ளத்தை வணங்கி வாழ்த்துகிறேன்.

அவர்கள் வீட்டுச் சமையலறைகூட அப்போதுதான் துடைத்து வைத்த ஆப்பிள் போலப் பளபளப்பாய் இருக்கிறது.

''உங்கள் வீட்டு ஸ்டவைக்கூட யாரோ கொடுத்த அவார்டைப் போலல்லவா அழுக்குப் படாமல் வைத்திருக்கிறீர்கள்! சமைக்கிறீர்களா இல்லையா?'' என்று சந்தேகத்தோடு கேட்டேன்.

சிரிப்பை அடக்க முடியாமல், அன்று சமையல் நடந்தற்கான சாட்சிகளைக் காட்டினார்.

மாடி அறையில் ஒரு பெரிய சுவரோவியம் ஒட்டப்பட்டிருந்தது.

அது, ஒரு பெரிய வனாந்தரத்தை வரைந்து காட்டியிருந்தது.

அதைப் பார்த்த உடனே மனசு அதற்குள் ஓடி விழுந்து உட்கார்ந்து கொண்டது.
தாகூர் சொன்னதைச் சொன்னேன்.

''எந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தவுடன் நமக்கு அந்த இடத்திற்குப் போய் உட்கார வேண்டும் என்று தோன்றுகிறதோ அதுதான் சிறந்த ஓவியம்.

எனக்கு இப்போது இந்த ஓவியத்தில் இருக்கிற இந்த மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு எழுத வேண்டும் போலிருக்கிறது'' என்றேன். ஜெயராம் சிரித்தார்.

மீண்டும் வரவேற்பறைக்கு வந்து அமர்ந்தோம்.

வாணி ஜெயராம் : நேற்று சிலோன் ரேடியோவில் 'ஒரு இந்தியக் கனவு' படத்தில் நீங்கள் எழுதிய 'என் பெயரே எனக்கு மறந்து போன' பாடலைக் கேட்டேன்.

சமீபகாலத்துல ரசிக்கற மாதிரி வந்திருக்கும் பாடல்கள்ல இதுவும் ஒன்று.''

நான் : எனக்கும் ரொம்பப் பிடித்த பாட்டு அது. முதன் முதலில் புத்தகத்துக்குள்ளிலிருந்து எடுத்து இசையமைக்கப்பட்ட முதல் புதுக்கவிதைங்கற அந்தஸ்து அந்தப் பாட்டுக்கு உண்டு. எம்.எஸ்.வி. ரொம்ப நல்லா இசையமைச்சிருக்கார். நீங்களும், எஸ்.பி.பியும் ரொம்ப அழகாப் பாடியிருக்கீங்க.''

வாணி ஜெயராம் : ''உங்களுடைய முதல் பாடலே 'இது ஒரு பொன்மாலைப் பொழுது''தானா?

நான் : ''ஆமாம். நான் எழுதி நீங்கள் பாடின முதல் பாட்டு எது தெரியுமா?''

கொஞ்சநேரம் யோசித்துவிட்டு கணவர் ஜெயராமைப் பார்க்கிறார். அவர் என்னைப் பார்க்கிறார்.

நான் : ''மேகமே மேகமே'' தான்.''

ஆச்சரியத்தால் இருவரின் விழிகளும் குரல்களும் உயர்கின்றன.

வாணி ஜெயராம் : ''அப்படியா! அதற்கு முன்பு உங்கள் பாடலை நான் பாடியதேயில்லையா?''

நான் : ''இல்லை. அப்போதுதான் நான் திரையுலகத்திற்கு வந்து கொண்டிருக்கிறேன். அந்தப் பாடல், எண்ணிக்கையில் எனது எட்டாவது பாடலாகவோ அல்லது ஒன்பதாவது பாடலாகவோ இருக்கக்கூடும். உங்களுக்கு 'கஜல்' தெரியும் என்பதால் அந்தப் பாடலைச் சிங்காரித்துவிட்டீர்கள் என்று இசையமைப்பாளர் திரு. சங்கர் (கணேஷ்) என்னிடத்தில் பாராட்டியிருக்கிறார்.''

வாணி ஜெயராம் : ''நம்மைவிட நமது இசைக்கு ஆயுள் அதிகம். இந்த மாதிரி ஜீவனுள்ள பாடல்கள்தான் காலத்தைக் கடந்து நிற்கும்.

நான் : ''மல்லிகை என் மன்னன் மயங்கும்', 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்', 'மேகமே.. மேகமே' போன்ற பாடல்களைப் பாடிவிட்டு எப்போதாவது நீங்க  கிளப் டான்ஸ் பாட்டுப் பாடுவது மனசுக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்கு மேடம். குத்துவிளக்குல சிகரெட் பற்ற வைக்கற மாதிரி இருக்கு.''

தான் அமர்ந்திருந்த சோஃபா அதிரச் சிரிக்கிறார்.

இன்றைய இசையுலகத்தைப் பற்றிய சின்னச் சின்னச் சர்ச்சைகள், அங்கங்கே சில ஆதங்கங்கள், மற்றவர்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயங்கள், 'நெஞ்சமெல்லாம் நீயே' படத்தில் வரும் 'யாரது' என்ற பாடலைப் பற்றிய சிலாகிப்புகள், இவற்றோடு அந்தத் தாயுள்ளத்தின் அன்பையும், உபசரிப்பையும் ஏற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

திரும்பி வரும்போது அநத்ச் சகோதரியின் குரல் என்கூடவே வந்து கொண்டிருக்கிறது.

- கவிஞர் வைரமுத்து (உடனிருந்து கேட்டு உரையாடலை எழுதியவர் : சுதா முருகேசன்)
By சேகர் ராஜதுரை

திருமணம்                                                                                                                                                                                என்று தனக்கென்று பொருள் சேமித்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்த போது தனக்குச் சிரம்ப்பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்யமுன் வந்திருக்கமாட்டான். எனவை இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில், பெண் ஒருவனது ஒத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து பிறகு அவளே அவனுக்குச் சொத்துமானாள். 

பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவுமனா நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனிதச் சுபாவம் இப்படித்தான் இருக்கும்; அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததகா – தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும்.

திருமணத்தின் அடிப்படைத் தேவை
கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நூகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும், ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.

திருமணம் பற்றிய கொள்கை
திருமணத்தின் அடிப்படையே இதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மண மக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புடனும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.

வாழ்க்கைத் துணைவர்களின் உறவு
மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்தத் துணையினைத் தேடிக் கொள்வதுதான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையில் இருக்க வேண்டும்.

நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் ஒத்துப் போக ஒருவரை ஒருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமை உடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.

மணமக்களின் உரிமை
நாங்கள் செய்து வைக்கும் திருமணத்தில் மணமகளும் மணமகனும் சம உரிமை உடையவர்கள். இருவரும் சினேகிதர் மாதிரி. இருவரிலும் உசர்வு தாழ்வு இல்லை. உதாரணமாக இரண்டு பேர்கள் சேர்ந்து பகுதி பகுதி முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றார்கள். இந்த வியாபாரத்தில் இரு வருக்கும் எப்படிச் சம உரிமையும், இடமும், லாப நஷ்டத்தில் சமபங்கும் இருக்கின்றதோ அது போலத்தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்ட மணமக்கள் இருவருக்கும் உள்ள உரிமை யாகும்.

காதல்
ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? குடிகாரனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்