By சேகர் ராஜதுரை
பெண்ணே!
என் காதலை ஏற்றுக்கொள்
இல்லை
எப்படியாவது என்னைக் கொல்
உன்னால் நான்...
உயிரிழக்காமல் சாகிறேன்
உணர்வில்லாமல் வாழ்கிறேன்
காதல் அனுபவமும்
உந்தன் நினைவுகளும்
இதமாய்த்தான் இருக்கிறது
அதனால் வாழப் பிடிக்கிறது
சிலநேரம்
உந்தன் நினைவுகளும்
இரக்கமில்லா இரவுகளும் தனிமைகளும்
என்னை
இன்ச் இன்சாய் கொல்கின்றன
அதனால் வாழப் பிடிக்கவில்லை
நான் வாழவா? சாகவா?
Post a Comment