எனக்குத் தெரிந்து
இந்த உலகில்....
மலர்களின் இதழ்கள்தான்
மென்மையானவை..... இதமானவை.....
2010 ஜனவரி 16 வரைக்கும்..
அதற்குப் பிறகு
அவளின் இதழ்கள்தான்
அன்றுதான்
அவள் எனக்கு
முத்தமிட்ட முதல் நாள்....
பெண்ணே!
என் காதலை ஏற்றுக்கொள்
இல்லை
எப்படியாவது என்னைக் கொல்
உன்னால் நான்...
உயிரிழக்காமல் சாகிறேன்
உணர்வில்லாமல் வாழ்கிறேன்
காதல் அனுபவமும்
உந்தன் நினைவுகளும்
இதமாய்த்தான் இருக்கிறது
அதனால் வாழப் பிடிக்கிறது
சிலநேரம்
உந்தன் நினைவுகளும்
இரக்கமில்லா இரவுகளும் தனிமைகளும்
என்னை
இன்ச் இன்சாய் கொல்கின்றன
அதனால் வாழப் பிடிக்கவில்லை
நான் வாழவா? சாகவா?
நீ என் வாழ்க்கையின்
ஒரு பகுதியக மட்டும் இருக்கலாம்
ஆனால்.........
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
என் ஆயுள் வரை இருக்கும் - ஏன்
நான் இறந்த்தாலும் இருக்கும்
என்னை எரித்தாலுமது சாம்பலாகும்
அந்த சாம்பலை......
நீரில் கரைத்தாலும் சரி
காற்றில் தூற்றினாலும் சரி
காற்றும் நீரும் இருக்கும் வரை
என் காதலும் இருக்கும்.....