By சேகர் ராஜதுரை
100 ரூபாய் கொடுக்கும் போதும்
ஆயிரம் கேள்வி கேட்கும்
அப்பாவுக்கும்,

அப்பாவுக்கு தெரியாமல்
1000 ரூபாய் கொடுக்கும்
அம்மாவுக்கும்
தெரியாது

அந்த 1100 ரூபாய்க்கும்
அவளுக்கு நான்
Gifts வாங்கி கொடுத்தது......
By சேகர் ராஜதுரை
வாரம் ஒரு வெள்ளிக்கிழமை
உன் பெயரை
அர்ச்சதை போடும் ஐயருக்கு
தட்சணை கொடுக்கிறாய்
ஓயாமல்
உன் பெயரையே உச்சரிக்கும்
அடியேனை விட்டு விட்டாயே ...?

தட்சணையாய்
பணமொன்றும் தேவையில்லை
பார்வைகள் தந்தால் போதும்......
By சேகர் ராஜதுரை
காமம் தலைக்கேறினால்
இரண்டு "இன்ச்" இடைவெளியும்
நான்கைந்து
கடல்வெளித் தூரம்தான்.......


காதல் தலைக்கேறினால்
ஆறேழு கடல்வெளியும்
இரண்டு இன்சிலும்
இழிவான தூரம்தான்.......
By சேகர் ராஜதுரை
உன்னைப் பற்றி
என் தோழிகள்
பெருமையாய் பேசும்போதெல்லாம்
கோபம் கோபமாய் வருகிறது
உள்ளுக்குள் கொஞ்சம்
சந்தோசமாயும் இருக்கிறது
ஒருவேளை.....
இது - அதுவோ?
By சேகர் ராஜதுரை
முத்தம்
கொடுப்பதிலும் பெறுவதிலும்
அவள் குழந்தை மாதிரி.. நான்
எவ்வளவு கொடுத்தாலும்
ஏற்றுக்கொள்வாள் - ஆனால்

பலமுறை கெஞ்சினால்தான்
ஒன்று கொடுப்பாள்......
By சேகர் ராஜதுரை
இந்தச் செடியின்
ஒரு பூவுக்கு
ஐந்து இதழ்கள்....  இங்கே
எத்தனை பூக்கள்
எத்தனை இதழ்கள்
இருந்தும் என்ன.........
இரண்டு இதழ் பூ
உன்னைவிட அவற்றுக்கு
அழகாய்ச்
சிரிக்கவும் தெரியவில்லை
மணக்கவும் தெரியவில்லை.....
By சேகர் ராஜதுரை
நான் அவளை
நான்கு வருடமாய்க் காதலிக்கிறேன்
என் நண்பன் அவளை
இரண்டு வருடமாய் காதலிக்கிறான் 
அவளும் அவனை.....


இதைப் பற்றி நான்
கவலைப் பட்டபோது  - என்
இன்னொரு நண்பன் சொன்னான்
"அவன் உன்னைவிட அழகு"

நான் அவனிடம் சொன்னேன்...
" அப்படியென்றால் - நான்
உன் காதலியை காதலித்திருக்கலாம்
ஏனென்றால்
நான் உன்னை விட அழகு" 

"இது காமெடி இல்ல,  இன்றைய நடைமுறைக் காதல்....."
By சேகர் ராஜதுரை
வருகிற புத்தாண்டில்
எனக்கொன்றும்
பெரிசாய்த் தேவையில்லை
 
பேருந்துகளில் ஏறுகின்ற
மற்றும் அடிக்கடி
என் வீட்டுக்கு வருகின்ற   
பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
ஓரிரண்டாவது குறைந்தால் போதும்...

என்னுடன்
பழகித் திரியும் நண்பர்களும்
பக்கத்து வீட்டு மாமாவும் - என்
தாத்தாவும் தமையனும்
புகைப்பதை விட்டால் போதும்....

அடுத்த ஆண்டுக்கு அது மட்டும் போதும்




நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்