By சேகர் ராஜதுரை
அந்தியின் வெய்யிலை
பந்தாடுதே பேய் மழை
இந்நிலை சொல்லுதே
என் காதலின் வானிலை

ஒரு முறை ஒரு முறை
என் விழிகளை பாராயோ
கனவுகள் கசிந்திட
அது கதைப்பதை கேளாயோ

பாதி கண்களை மூடுகிறேன்
மீதி கண்களில் தேடுகிறேன்
உள்ளும் புறமும் உன் முகமே
ஊர்ந்திட கண்டேனே

என் நெஞ்சம் எங்கும் பம்முகின்ற  கதல்
அதை சொல்லிவிட வேண்டும் என்ற ஆவல்
அட என்னவென்று சொல்வதென்று கேட்டால்
என்ன செய்வேனோ?....

ஒரு மொட்டவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்
என் கட்டவிழ்ந்த காதல் சொல்ல ஏலும்
என நம்பவில்லை நம்பவில்லை நானும்
வாங்கவில்லை நான்

பல வண்ண வண்ணக் கற்கள் வைத்த கைப்பை
நம் பெயர்களை அச்சடித்த கோப்பை
நீ தூங்கவென்று கத கதப் போர்வை
தேடுகின்றேன் நான்

நின்  தோட்டுக்கென சிப்பி சங்கு தரவா
மான் குட்டி போல முத்துசரம் தரவா
தேன் குட்டி போல தூவல் வாங்கி தரவா
என்னதான் வாங்க.....?

சிரிப்பால் ஈர்க்கும் உனக்கு
வீட்டில் செயற்கை அருவி தரலாம்
இதயம் முழுதும் ஈரம்
அதனால் செடிகள் வளர்க்க தரலாம்

அழகு செய்யும் சாதனம்
வாங்கத் தோன்றும் காரணம்
உன்னை சேர்ந்த பின்புதான்
அழியும் அவற்றின் ஆணவம்

உன் பக்கம் வந்தால் அதிகமாய் துடிக்கும்
சற்று தள்ளி சென்றால் செத்ததுபோல் நடிக்கும்
அட இதயத்தை அவள் கையில் தந்தால்
என்ன செய்வாளோ?.....

உன்னை ஏந்தி செல்ல எப்பொழுதும் இருப்பேன்
நீ சொல்லும்படி காலணிகள் கொடுப்பேன்
ஓர் தேவையென்றால் கால்மிதியாய் கிடப்பேன்
தாங்கினால் என்ன.......

உனது பெரிய படத்தால்
அறையின் சுவரை மறைத்து விடவா
நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை
விரலை நீட்டி தொடவா..ஹேய்..

தாஜ்மஹால் வாங்கலாம்
ஷாஜகானாய் மாறலாம்
ஏற்கவில்லை நான் அதை
உனக்கு பின்பு வாழ்வதை

விரல் மோதிரங்கள் இப்போதெல்லாம் சலிப்பு
அட தங்கத்துக்கு தங்க நகை எதுக்கு
வாங்கவில்லை நான்..ஹேய்..

வரிகள் - கவிதாயினி தாமரை
படம்      - முப்பொழுதும் உன் கற்பனைகள்













0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்