By சேகர் ராஜதுரை
அவள் யார்?
யாரவள்?
இந்தக் கிராமத்து நுழைவாயில்
என்னை வரவேற்க வந்த வானவில்லா?

விடிந்தும் விடியாத இரவை
இன்றுதான் பார்த்தேன்
நான்
அவளின் கண்களைச் சொல்கிறேன்!

கிளி வந்து இன்னும்
கொத்திச் செல்லாத அத்திப் பழங்கள்
நான்
அவளின் இதழ்களைச் சொல்கிறேன்!

பளிங்குத் தரையில்
அள்ளி இறைத்த
வெள்ளிக் காசுகள்
நான்
அவளின் சிரிப்பைச் சொல்கிறேன்!

போகப் போக
என் டைரியின்
எழுதப்படாத பக்கங்களிலெல்லாம்
இதை விட
இன்னும் சொல்கிறேன்!
0 Responses

Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்