By சேகர் ராஜதுரை
இது ஒரு சக்தி. வாழ்க்கைச் சக்தி.
இயற்கையானது.

ஆனந்தமானது அனுபவிக்க. ஒரு பாவமும்
அறியாதது.

ஒரு தவறும் இதில் இல்லை.
வாழ்க்கை இருப்பதும் வளர்வதும்
காமம் என்ற அடிப்படைச் சக்தியினால்.
 

நாம் காமத்தால் பிறந்தவர்கள்.
நம் ஒவ்வொரு அணுக்களிலும்
காமம் சக்தியாக உள்ளது.

இதை அறிந்தே ஓவ்வொரு சமூகமும்
சமயமும் இதைக் கட்டுப்படுத்தி
வைத்துள்ளன. 


தமது பிழைப்புக்காக.
இதற்கு எதிரான கருத்துக்களை நமக்குள்
விதைத்து, அடக்கப்பண்ணி குற்ற உணர்வை
வளர்த்து நம்மை நோயாளியாக்கி பின்
நோய்க்குச் சேவை என்ற பெயரில் பரிகாரமும்
செய்கின்றன.

 
காமம்! நமக்குள் இயங்கும் இயற்கையின் மிகப் பெரிய சக்தி.
நம்மால் கட்டுப்படுத்த முடியாதது. நம் கட்டுப்பாடுகளையும் மீறி வெளிவருகின்றது. அடிபணிகின்றோம். அடுத்த கணம் குற்ற உணர்வால் வருந்துகின்றோம்,  ஏன்?
காம சக்தியின் ஆற்றலை புரிந்து கொள்ளத்தவறியதால்
அச் சக்தியின் பலம் கண்டு பயந்து இதை வழிநடாத்த முடியாமல்
இதற்கு எதிரான கருத்துக்களையும் அடக்குவதற்கான வழிகளையும்
சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியவர்கள், நம்முள் விதைத்துள்ளனர்.
 

இது எப்பொழுதும் காம சக்திக்கு எதிராக நம்மை சிந்திக்க செயற்படவைக்கின்றது. காரணம் நம் உள்மனதில் (subconsciousness) இவை ஆழமாக வேருண்டியுள்ளன. காமத்தைக் கண்டிப்பது தன்னைக் கண்டிப்பதற்கு சமம் என்கிறார் ஓசோ.
 
காம சக்தியை ஒழுங்கு முறையில் வழிநடத்தினால் சிறந்த பலன்களையும்
புதிய ஆற்றல்களையும் நமக்குள் வளர்த்திருக்கலாம்.
இதற்கான வழிகளை முன்னோர்கள் பலர் கண்டுபிடித்துள்ளனர்.
 

ஓசோ!
இந்த வழிகளையும் வழிகளை கண்டுபிடித்த வழிகாட்டிகளையும்
புதை குழிகளிலிருந்து மீட்டெடுத்து உயிர்ப்பித்து தூசிதட்டி
மீண்டும் நமக்கு வழங்கியுள்ளார். வழிகாட்டியுள்ளார்.

காமமின்றி நாமில்லை.
 

ஆனால் ஒரு உயிரை உருவாக்க மட்டுமே
நாம் பயன்படுத்துகின்றோம்.
இது மட்டப்படுத்தப்பட்ட பயன்பாடு மட்டுமே.
காம சக்திக்கு எதிரான ஆதிக்கம் இருந்த காலங்களில்
தம் சந்ததிகளை உருவாக்க மட்டுமே காமத்தைப் பயன்படுத்தினர்.
இதுவே மனிதருக்கு பழக்கமான வழக்கமான பணியாகிவிட்டது.
புதிய உயிர் உருவாவது காம சக்தியின் ஒரு பயன்பாடு மட்டுமே.
இதைவிட மனிதரின் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கே பயன்படக்கூடியது
இக் காம சக்தி.
 

இதைப்பற்றி சிந்திக்க நேரம் ஏது?
காம கலவையை நம் சக்தியை இழப்பதற்கும் ஆறுதல் அடைவதற்கும்
உச்ச இன்பம் என்ன என்பதை அறியாமல் இயந்திரதனமாகப் பயன்படுத்துகின்றோம். உச்ச இன்பம் என்பது நாம் சக்தி மயமாக மாறுவது.
நமது தலையிலிருந்து கால் விரல் வரை அனைத்து இயங்கும் சக்தி நிலை.
சக்தி அலை வடிவங்களாக…உடலை உணராநிலை.
ஏன் நம்மால் உணர முடியவில்லை.
 

பிரக்ஞையற்றநிலை.
அவசரம். குற்ற உணர்வு.
எவ்வளவு விரைவாக முடிக்கலாமோ
அவ்வளவு விரைவாக முடிக்க நினைப்பது.
முடிந்தவுடன் விடுதலை பெற்ற உணர்வு.
 

ஆனால் இது தற்காலிக விடுதலை என்பதை மறந்துவிடுவது.
ஏனனில் மீண்டும் காமம் நம்மை இழுக்கும்.
பழையபடி…இவ்வாறு
ஒரு வட்டத்தில் இயங்குவதே நம் வாழ்வு.

காம செயற்பாட்டில் உடனடியாக
ஆணால் பங்குபற்ற முடியும்
என்பதால் ஆணுக்கு அவசரம்.
பெண்ணுக்கு நீண்ட நேரம் தேவை.
இதனால் நீண்ட காலமாக
பெண்கள் காமத்தின் இன்பத்தை அனுபவித்ததில்லை.
உச்ச இன்பம் (orgasm) ஆண்களுக்கு மட்டுமல்ல
பெண்களுக்கும் வரும் என்பது இயற்கைக்குப் பழசு.
மனித மன உலகுக்குப் புதுசு.
 

ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது.
உடன் எழுந்து உடன் இறங்கும். மீண்டும் உடன் எழாது.
பெண்ணினது செங்குத்தானதல்ல.
நீண்டதும் படிப்படியாக உயர்ந்தும் செல்லும்
அலை வடிவம் கொண்டது மட்டுமல்ல
குறைந்தது ஒரே நேரத்தில் மூன்று தரத்திற்கு மேல் உயரக்கூடியது.
ஆகவே ஆணால் திருப்பதி செய்யமுடியாது.

காமத்தில் நாம் இன்பம் அனுபவிக்கும் கணம்
மூன்று முக்கிய விடயங்கள் நடைபெறுகின்றன.
நேரம், தன்முனைப்பு, இயற்கையாக இருப்பது.
நேரம் தெரியாது, மறந்து விடுவோம்.
தன்முனைப்பு இல்லாது இருக்கும்.
 

நான் என்பது இல்லா நிலை. இயற்கையாக இருப்போம்.
இயற்கையுடன் கலந்து பிரபஞ்சமாகவே மாறியிருப்போம்.
இந்த நிலையே தன்மையே உச்ச இன்பத்தை தருகின்றது.
இதைக் காம கலவையில் சிறிது நேரம் மட்டும் பெறுவதால்
நாம் சிற்றின்பம் எனக் கூறி குறைந்த மதிப்பை வழங்கிவிட்டோம்.
இந்த உச்ச இன்பத்தை ஒவ்வொரு கணமும் அனுபவிப்போரே
பேரின்பம் பெற்ற ஞானிகள் என ஆன்மீகத்தில் கூறுகின்றோம்.

இதை அறிந்து கொள்வதற்கு தடையாக இருப்பது
நமது பிரங்க்ஞையற்ற தன்மை.
 

அவசரமின்றி, ஆறுதலாகவும் குற்றவுணர்வின்றி, ஆனந்தமாகவும்
ஓவ்வொரு கணத்தை முழுமையாகவும் பிரங்க்ஞையுடனும்
காம கலவையில்; பங்குபற்றும் பொழுது
உச்ச இன்பம் என்ன என்பதை அறியலாம்.
சக்தி வெளியேற்றம் இல்லாது தொடர்ந்தும் அனுபவிக்கலாம்.

இது இன்பம் அனுபவிக்க மட்டுமல்ல
ஆனந்தமான வாழ்வுக்கு மட்டுமல்ல
மானுட விடுதலைக்கும் வழி காட்டும்.
இதுவே ஓசோ நமக்கு கற்பிக்கும் பாடம்.
 

இது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிவது.
ஓரே ஒர வழி தான் உண்டு. காம கலவையில்; ஈடுபடும் பொழுது பிரங்க்ஞையுடனும் முழுமையாகவும் செயற்படுவது மட்டுமே இதற்கு விடைதரும்.
ஏனனில் உண்மையான அறிவு
நமது அனுபவத்திலையே கிடைக்கின்றது.
காம கலவையில் உருவாகும் சிறிதுநேர பேரின்பத்தி லிருந்தே தியானம் கண்டுபிடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார் ஒசோ.

 
காம சக்தி இருபத்தியொரு வயது வரை
அதன் உச்ச நிலைக்கு இயற்கையாக உயர்ந்து சென்று
பின் கீழ் இறங்கி நாற்பத்தியிரண்டு வயதில்
இயற்கையாக காமம்; நம்மைவிட்டு அகன்றுவிட வேண்டும்.
இது ஓவ்வொரு வயதுக் காலகட்டத்தையும்
முழுமையாக அனுபவித்திருந்தால்
இயற்கையாக நடைபெறும் ஒரு நிகழ்வு.
ஆனால் என்ன நடைபெறுகின்றது.
நாற்பது வயதில் நம்மை விட்டுச் செல்ல வேண்டிய காமம்
இறக்கப்போகும் என்பது வயதிலும்
நம் மனதை விட்டுச்செல்வதில்லை.
ஏன்?
 

அந்தந்த காலகட்டங்களில் அவற்றை அனுபவிக்காமல்
அச் சக்திகளை அடக்கி பிற விடயங்களுக்கு
கவனம் திசை திருப்பப்டுகின்றது.
இதற்கு தமது காம சக்தியை
வெளிக் காட்டுவதில் இருக்கும் பயமே காரணம்.
பொதுவாக ஆண்கள் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தை பற்றி சிந்திக்கின்றனர்.
 

பெண்கள் ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கு ஒரு முறை
காமத்தைப் பற்றிச் சிந்திக்கின்றனர்.
ஆகவே காமத்தை சரியான பாதையில் வழிநடத்துவதே
மனிதர்கள் மனச் சோர்வின்றி மன அழுத்தமின்றி
ஆனந்தமாக வாழ்வதற்கு சிறந்த வழி.

 
பிரம்மச்சாரியம் என்பது காம சக்தியை அடக்குவதல்ல.
இதை அடக்குவதால் மேலும் காமம் அதிகரித்து காமுகர்களாக உருவாகவே முடியும். இக் காம சக்தி மாற்றப்படக் கூடியது.
இவ்வாறு மாற்றுவதன் மூலம் காமம் நம்மிலிருந்து
மரங்களிலிருந்து பழுத்த பழங்கள் விழுவது போல்
காய்ந்த இலைகள் தானாக விழுவது போல் அகன்றுவிடும்.
இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.

சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex)
காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி
பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம்.
புடிகளில் ஏறுவோமா?

==============================
Labels: | edit post
5 Responses
  1. Anonymous Says :

    இதன்போது காம சக்தி காதலாக பரிணாமமடைகின்றது.
    சிற்றின்பம் என்ற காமத்திலிருந்து (sex)
    காதல் (love) என்ற என்ற படிகளில் ஏறி
    பேரின்பம் என்ற அன்புத்தன்மையை (compassion) அடையலாம்.
    புடிகளில் ஏறுவோமா?very true. good post.


  2. Unknown Says :

    அற்புதமானது நன்றி



  3. kabilan Says :

    உண்மையானவை


  4. kabilan Says :

    உண்மையானவை


Post a Comment

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்